அமலாபால் வீட்டில் குழப்பம் ஏதும் இல்லையாம்..!

திருமணத்துக்குப்பின் அமலாபால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டரே தவிர சுத்தமாக நிறுத்திவிடவில்லை. கடந்த வருடம் தமிழில் ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த அமலாபால் இந்த வருடத்தில் தமிழில் அம்மா கணக்கு’ என்கிற படத்தை கொடுத்தார்.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடித்த ‘ஷாஜகானும் பரீக்குட்டியும்’ என்கிற படத்தில் நடித்தார்.. மீண்டும் படங்களில் நடிப்பதால் அவரது புகுந்த வீட்டில் உரசல் அது இது என செய்திகள் வெளியாகின. ஆனால் அமலாபால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள, கதாநாயகனுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடும் காட்சிகள் இல்லாத படங்களாக தேர்ந்தெடுத்து கவனமாக நடிப்பதால் வீட்டில் பெரிய அளவில் முணுமுணுப்பு எதுவும் இல்லையாம்.

Leave a Response