சிம்பு திருமணம் பற்றி டி.ராஜேந்தர் சூசகமான தகவல்..!

சிம்பு படப்பிடிப்பில் சரியாக கலந்துகொள்வதில்லை, அதனால் அவரது படங்கள் சரியான நேரத்தில் வெளியாவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருக்கட்டும். முப்பது வயதை தாண்டிவிட்ட, இந்த முப்பது வயதுக்குள் மூன்று காதல்களையும் மூன்று காதல் முறிவுகளையும் பார்த்துவிட்ட சிம்புவுக்கு எப்போது திருமணம் செய்து வைக்கப்போகிறாராம் அவரது தந்தை என சிம்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது..

சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.ஆர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள ஏராளமான பெண்கள் விரும்புகிறார்கள் என்றும் அதேசமயம் அவர் திருமணம் காதல் திருமணமாக கூட இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். எப்படி வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளட்டும், ஆனால் தந்தை கைப்பிளையாக இருப்பதால் பிரசாந்தின் கல்யாணம் போல இவரையும் ஏடாகூட சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் என்பது தான் சிம்பு ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Response