தெலுங்கு இயக்குனர் சந்திரசேகர் ஏலெட்டி இயக்கத்தில் கவுதமியுடன் மோகன்லால் இணைந்து நடித்துள்ள படம் தான் ‘மனமந்தா’.. மோகன்லால், கௌதமி இவர்களுடன் நாசர், ஊர்வசி ஆகியோரும் இருப்பதால் இந்த ‘மனமந்தா’ படம் தமிழ், மற்றும் மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இதன் தமிழ் பதிப்புக்கு ‘நமது’ என்றும் மலையாள பதிப்புக்கு ‘விஸ்மயம்’ என்றும் பெயர் வைத்துள்ளார்கள். வரும் ஆகஸ்ட்-5ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
ஒரு உலகம்-நான்கு கதை என்கிற தத்துவத்தை இதில் கையாண்டு இருக்கிறாராம் படத்தின் இயக்குனர்.. சூப்பர் மார்க்கெட்டில் உதவி மேலாளராக வேலை செய்யும் மோகன்லால், குடும்பத் தலைவியாக கவுதமி,11 வயது சிறுமியாக ரெய்னாராவ், 24 வயது வாலிபனாக விஷ்வாந்த் என நால்வரைப்பற்றிய நான்கு கதைகள் படத்தில் உண்டு.
இந்த நால்வரும் தனித்தனி கதாபாத்திரங்கள் – யாரும் யாருக்கும் அறிமுகமோ – உறவு முறையோ இல்லை. நான்கு பேரின் கதைகளும் ஓன்று சேரும் இடம் தான் படத்தின் கிளைமாக்ஸாக இருக்குமாம். மொத்தத்தில் அருமையான குடும்பக் கதையாக ‘நமது’ உருவாகி உள்ளது.