இரண்டாம் கட்டத் தேர்தலிலும் முந்துகிறது இந்தியா கூட்டணி

18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏழுகட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களிலுள்ள 102 தொகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா – 20, கர்நாடகா- 14, இராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிகார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் ஏப்ரல் 26 அன்று வாக்குப்பதிவு நடந்தது.

மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்க இருந்தது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி, சமீபத்தில் மாரடைப்பால் காலமானதால், அங்கு வாக்குப்பதிவுமே 7 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டத் தேர்தல் நடந்த 102 தொகுதிகளில் சுமார் எழுபது முதல் எண்பது விழுக்காடு வெற்றியை காங்கிரசு தலைமையிலான இந்தியா கூட்டணி பெறும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது கட்டத் தேர்தல் நடந்த எண்பத்தெட்டு தொகுதிகளில் ஐம்பது விழுக்காட்டுக்கும் மேலான வெற்றியைப் பெறும் என்றும் அதாவது சுமார் ஐம்பது தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என்று சொல்லப்படுகிறது.

இவற்றில் கேரளாவின் இருபது தொகுதிகள் மற்றும் கர்நாடகாவில் தேர்தல் நடந்த 14 தொகுதிகளில் பெருமளவிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என்று சொல்கிறார்கள்.

Leave a Response