கவுதமி அதிமுகவில் இணைய இதுதான் காரணமா?

நேற்று, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நடிகை கவுதமி சந்தித்தார்.அவர் முன்னிலையில், கவுதமி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகினார்.

சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அனைத்துமே விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தே நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்ததும் அதையொட்டியே நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அவரிடமே கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.

இந்நிலையில் அவர் அதிமுகவில் இணைந்தது குறித்து பல்வேறு யூகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று…

நடிகர் கமலும் நடிகை கவுதமியும் பல ஆண்டுகளாக இல்லற வாழ்வில் இணைந்திருந்தனர்.சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்துவிட்டனர்.அதன்பின்னர் சென்னையில் கவுதமி குடியிருக்க ஒரு வீடு பிடிக்கக்கூட கமல் தரப்பில் இடையூறு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டார் என்று சொல்லப்பட்டது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமல், திமுக கூட்டணியில் இணைந்து களம் காணவிருக்கிறார். அவர் கோவை தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், இப்போது அதிமுக சார்பில் போட்டியிட அனுபவம் வாய்ந்த யாரும் முன்வரவில்லையாம்.பல அணிகளாக அதிமுக பிரிந்திருப்பதால் தோல்வி நிச்சயம் என்பதால் செலவு செய்ய யாரும் தயாராக இல்லை.

இந்நிலையில், கமலுக்கு எதிராக நிற்க யாரும் முன்வரவில்லையெனில் கவுதமியைக் களமிறக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறதாம். எல்லாச் செலவுகளையும் தாமே செய்வதாகவும் எடப்பாடி கூறியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் கமலுக்கு எதிராகக் களமிறங்க கட்சியினர் முன்வரும் பட்சத்தில் தமிழ்நாடு முழுக்க தேர்தல் பரப்புரைக்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று கவுதமிக்கு உறுதிகொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இரண்டில் எது நடக்கும்? என்பது அவரே சொன்னது போல் பொறுத்திருந்துதான் அறியவேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response