சட்டவிரோத புத்தவிகாரை – யாழ் மக்கள் போராட்டம்

தமிழீழ நிலப்பரப்பெங்கும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களில் புத்தவிகாரையை நிறுவி தமிழ்மக்களின் தனித்துவத்தை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டியிருக்கிறது சிங்கள அரசு. அதற்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்திருக்கின்றன.

மே 3 ஆம் தேதியன்று யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத புத்தவிகாரையை அகற்றக்கோரிப் போராட்டம் நடந்தது.

அதுகுறித்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……

யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தையிட்டியில் இராணுவம் நூறு அடி உயரமான புத்தவிகாரை ஒன்றை அமைத்து வருவதற்கு எதிராக இன்று அப்பகுதி மக்களும் அரசியல் தரப்பினரும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்,கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தியிருக்கும் இராணுவம் அவர்களிடம் காணிகளை விடுவிக்காது சட்டவிரோதமான முறையில் அப்பகுதியில் புத்தவிகாரையை அமைத்துவருகின்றது. பொதுமக்களின் காணிகளை அவர்களிடமே மீளவும் ஒப்படைக்கக்கோரியும் , புத்தவிகாரையை உடனடியாக அகற்றக்கோரியும் இப்போராட்டம் விகாரைக்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இப்போராட்டத்தை வெசாக் தினமான ஜூன் 5ஆம் திகதிவரை தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது..

பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பைத்தெரிவிக்கும் முகமாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட காணிச் சொந்தக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆதரவைத் தெரிவுக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியப் பசுமைஇயக்கமும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response