கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி – கருத்துக் கணிப்பால் உற்சாகம்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போது அம்மாநிலத்தில் பாசக ஆட்சி நடந்துவருகிறது.

இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

அந்த கருத்துக் கணிப்பின்படி, ‘224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டம்ன்றத்தில் காங்கிரசுக் கட்சி 116 முதல் 122 இடங்களைப் கைப்பற்றும். 39 முதல் 42 விழுக்காடு வாக்குகள் அக்கட்சிக்குக் கிடைக்கும்.

தற்போது ஆளும் பாசகவுக்கு 77 முதல் 83 இடங்கள் கிடைக்கும். 33 முதல் 36 விழுக்காடு வாக்குகளைப் பாசக பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மதசார்பற்ற சனதா தளம் கட்சி 15 முதல் 18 விழுக்காடு வாக்குகளுடன் 21 முதல் 27 இடங்களைக் கைப்பற்றும். மற்றவர்கள் 6 முதல் 9 விழுக்காடு வாக்குகளுடன் 1 முதல் 4 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பு கணித்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பானது சனவரி 15 முதல் பிப்ரவரி 28 ஆம் வரை சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 30 வாக்குச்சாவடிகளில் மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் கருத்துக்கணிப்பை நடத்திய லோக்பால் அமைப்பு கூறியுள்ளது.

இக்கருத்துக் கணிப்பால் கர்நாடகத்தில் காங்கிரசு தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Response