கொடூர சிந்தனையாளன் கைது – சமுதாய ஆர்வலர்கள் பாராட்டு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தைகள் வந்த நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பானது.

அதையொட்டி,

பெரியார் வேஷம் போட்ட இந்த குழந்தையை அடித்து கொன்று நாலுமுக்கு ரோட்டில் தூக்கில் தொங்க விட வேண்டும். அப்போதுதான் மத்த குழந்தைகளுக்கும் அதன் பெற்றோர்களுக்கும் பயம் வரும்.ஏன் வ உ சி, தேவர், பாரதி, நேதாஜி வேஷம் போடமுடியாதா? என மிகக் கொடூரமாக வெங்கடேஷ்குமார்பாபு என்பவர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து சமுதாய ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மக்களிடம் பீதியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு (36) என்பவர் கயத்தாறு காவல் நிலைய குற்ற எண் 100/22 U/S 153(A), 505(1), 506(1) IPC & Sec 67 IT Act கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

இந்நடவடிக்கைக்குப் பலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response