சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமையாக்குக – பழ.நெடுமாறன் கோரிக்கை

சிதம்பரம் கோயிலை அரசுக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்!
சட்டத்தை மதிக்காமல் செயல்படும் தீட்சிதர்களுக்கு
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்….

சிதம்பரம் நடராசர் கோயிலில் வழிபடவந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தப் பெண்ணை 20 தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கியுள்ளதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்களை உடனடியாகக் கைது செய்து தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

ஏற்கெனவே திருவிழா ஒன்றின்போது எங்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பாலு என்பவர் தீபாராதனைக் காட்டி வழிபட்டார் என்பதற்காக தீட்சிதர் ஒருவர் தாக்கி அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீட்சிதர்கள் அடாவடித்தனமான போக்கினைக் கடைப்பிடித்து வருகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். எனவே தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நடராசர் கோயிலை அரசுக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response