ஈழத்தமிழ் ஏதிலிகள் இந்திய குடியுரிமை கேட்டு கனிமொழியிடம் மனு

தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 9 ஈழத்தமிழ் ஏதிலியர் முகாம்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்துப் பேசினர்.

பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

தென் மாவட்டங்களில் உள்ள ஈழத்தமிழர் முகாம்களின் பிரதிநிதிகள் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக மனுஅளித்தனர். ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி ஈழத்தமிழர் முகாமுக்குச் சென்றபோது, அவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை அறிந்தேன். இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.

ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்துவோம். சிலர் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனையும் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response