கொரோனா 3 ஆவது அலை தீவிரமானதாக இருக்காது – ஐசிஎம்ஆர் தகவல்

கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று ஐசிஎம்ஆர் (ICMR – Indian Council for Market Research) தகவல் தெரிவித்துள்ளது. இது 2 ஆவது அலை போல தீவிரமாக இருக்காது என்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய 3 ஆவது அலை இருக்கும், ஆனால் அது 2 ஆவது அலை போல அதிகமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கும் என்று அர்த்தமல்ல’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றியத்தின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2 ஆவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3 ஆவது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் 3 ஆவது அலையிலிருந்து மக்களைக் காக்கும் முக்கியக் கேடயமாக இருக்கப் போவது தடுப்பூசி மட்டும்தான் என்று உலகளாவிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.அதேசமயம் 3 ஆவது தீவிரமானதாக இருக்காது என்று சொலியிருப்பது ஆறுதலாக இருக்கிறது.

Leave a Response