தி ஃபேமிலிமேன் 2 தொடரை உடனே அகற்ற வேண்டும் – தனியரசு கோரிக்கை

ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

வீரஞ்செறிந்த விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் வாழும் காலத்திலேயே இப்படி அபாண்டமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து அத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் இப்படி எடுத்ததற்காகப் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டுமெனவும் கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில்,தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, இத்தொடரை உடனே தடை செய்யவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவருடைய டிவிட்டர் பதிவில்…

தமிழீழ‌ விடுதலைக்காக போராடிய தமிழ்போப்ராளிகளையும் தலைவரையும்‌ உண்மைக்கு மாறாக காட்சிப் படுத்தியுள்ள தி ஃபேமிலிமேன் 2 வைக்கண்டிக்கிறோம்.

இத்தொடரை இணைய தளத்தில் இருந்து‌ அகற்ற வேண்டும்.

தவறினால் மாநில அரசும் ஒன்றிய அரசும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response