இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது – மக்கள் பாதிப்பு

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு இருந்தது.

இதன் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

நேற்றைய தினம் சென்னையில் பெட்ரோல் விலை இலிட்டருக்கு 96.94 ரூபாய்க்கு, டீசல் விலை இலிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை இலிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து இலிட்டர் 97.19 ரூபாய் ஆகவும், டீசல் விலை இலிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 91.42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இப்படி நாள்தோறும் விலை உயர்வதால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.

Leave a Response