இன்றும் (பிப்ரவரி 20) உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த பத்துநாட்களாக ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வடைந்தது.

சென்னையில் பிப்ரவரி 15 அன்று பெட்ரோல், லிட்டர் 91.19 ரூபாய், டீசல் லிட்டர் 84.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,பிப்ரவரி 16 அன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துலிட்டருக்கு 91.45 ரூபாய் எனவும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து , லிட்டர் 84.77 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17 அன்று விலை மேலும் உயர்ந்தது. பெட்ரோல் விலை 23 காசுகளும் டீசல் விலை 24 காசுகளும் உயர்ந்துள்ளன. இதனால் சென்னையில் பெட்ரோல் 91.68 எனவும் டீசல் 84.01 ஆகவும் உள்ளது.

பிப்ரவரி 18 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 91.98 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 85.31 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 92.25 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 85.65 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (பிப்ரவரி 20) பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 92.59 ரூபாய் எனவும், டீசல் விலையில் 35 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85..98 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Leave a Response