ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேரலாம் – நிர்வாகி அறிவிப்பு

நேற்று (சனவரி 17,2021) தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுகழக அலுவலகத்தில், ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு, தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், இராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட இச்செய்தியைத் தொடர்ந்து இன்று (சனவரி 18,2021) காலை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ளதாக உலாவரும் செய்திக்குறிப்பில்….

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத்தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response