காய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் விடுபட்டுபோன ஆனைமலையாறு நல்லாறு அணைகளை போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி
ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சார்பில் இன்று 29/11/20 ஞாயிற்றுக்கிழமை பொங்கலூர் மற்றும் குண்டடம் ஒன்றியத்தில் வட சின்னாரிபாளையம் கிராமத்தில் 16 ஊர்களில் விழிப்புணர்வு பெயர்ப்பலகை திறக்கும் நிகழ்வு நூற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் பங்கேற்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இறுதியாக சடையபாளைம் கிராமத்தில் திட்டம் நிறைவேற மாரியம்மன் கோவிலில் வழிபாடும் திட்டம் பற்றிய விளக்கவுரை பாசனசபை தலைவர் ஈஸ்வரமூர்த்தியால் நிகழ்த்தப்பட்டது.

காய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து இன்றைய நிகழ்வோடு இதுவரை 66 கிராமங்களில் விழிப்புணர்வு பெயர்பலகைகள் திறக்கப்பட்டு பிஏபி பாசன கிராமங்களில் ஆனைமலையாறு நல்லாறு அணைகள் கட்டப்படவேண்டியதின் அவசியம் பற்றி மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அது மக்களிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் இயக்கமாக இந்த கோரிக்கை முழக்கம் மேலும் பல நூறு பிஏபி பாசன கிராமங்களில் பரவி வெகுவிரைவில் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை வெற்றிகரமாக வென்றெடுக்க இன்று அனைவராலும் சபதமேற்று தொடர்ந்து போராட உறுதியேற்கபட்டது.

இந்த நிகழ்வில்,ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் என்.எஸ்.பி.வெற்றி,எஸ்.ஆர்.ஈஸ்வரமூர்த்தி,
கே.பி.சண்முகசுந்தரம், சண்முகம், அமராவதி பட்டகாரர்,நல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Response