கொரோனா நெருக்கடியிலும் வீதிக்கு வந்த உணர்வாளர்கள் – 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டத்தை (EIA 2020) எதிர்த்தும்
ஆகத்து 11 – அன்று தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமெனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டது. அதன்படி,மாவட்டங்கள் எங்கும் இந்தக் கொரானா நச்சுயிரித் தாக்கச் சூழலில், அரசு கொடுத்துவரும் நெருக்கடிகளுக்கிடையிலும் ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியோடு கீழ்க்காணும் ஊர்களில் நடைபெற்றன..

பல ஊர்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தளைப்படுத்தப்பட்டு,மாலையில் விடுவிக்கப்பட்டனர்..

ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற இடங்கள்:

1.சென்னையில்..
* அண்ணா சாலை- பெரியார்
சிலை அருகில்..
* வடசென்னை- சுங்கச்சாவடி அம்பேத்கர் சிலை அருகில்..
* திருமங்கலம் – சிபிஎஸ்இ அலுவலகம் அருகில்..
* மேடவாக்கம் – பாவலரேறு தமிழ்க்களம் முன்பு..

2.காஞ்சிபுரத்தில்..
* ஆட்சியர் அலுவலகம் எதிரில்..
3.வேலூர் மாவட்டத்தில்..
* பாராஞ்சி தலைச் சாலையில்..
4.திருப்பத்தூர் மாவட்டத்தில்..
* வாணியம்பாடியில்…
5.கருமலை மாவட்டத்தில்..
* ஓசூரில்..
6.தகடூர் மாவட்டத்தில்…
* தகடூரில்..
7.சேலம் மாவட்டத்தில்…
* சேலத்தில்..
* மேட்டூரில்..
8.நாமக்கல் மாவட்டத்தில்..
* பள்ளிப்பாளையத்தில்..
9.ஈரோடு மாவட்டத்தில்..
* ஈரோட்டில்..
10.கோவை மாவட்டத்தில்..
* கோவையில்..
* பொள்ளாச்சியில்..
11.திருப்பூர் மாவட்டத்தில்..
* திருப்பூரில்..
* உடுமலைப்பேட்டையில்..
12.திண்டுக்கல் மாவட்டத்தில்..
* திண்டுக்கல்லில்..
* பழனியில்..
13.திருச்சி மாவட்டத்தில்..
* திருச்சியில்..
14.தஞ்சை மாவட்டத்தில்..
* தஞ்சாவூரில்..
* பட்டுக்கோட்டையில்..
* பேராவூரணியில்..
15.மயிலாடுதுறை மாவட்டத்தில்..
* மயிலாடுதுறையில்..
16.திருவாரூர் மாவட்டத்தில்…
* திருவாரூரில்..
17.கடலூர் மாவட்டத்தில்..
* சிதம்பரத்தில்..
* காட்டுமன்னார்கோயிலில்..
18.புதுச்சேரியில்..
* இரண்டு இடங்களில்..
19.புதுக்கோட்டை மாவட்டத்தில்..
* புதுக்கோட்டையில்..
20.சிவகங்கை மாவட்டத்தில்..
* புது வயலில்..
* சிங்கம்புணரியில்..
21.முகவை மாவட்டத்தில்..
* முகவையில்..
22.மதுரை மாவட்டத்தில்..
* மதுரையில்..
23.தூத்துக்குடி மாவட்டத்தில்..
* திருச்செந்தூரில்..

இதை அறிவித்துள்ளதோடு, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் அனைவருக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும் கூறியுள்ளது.

Leave a Response