அமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தினந்தோறும் ஆயிரமாயிரமாக அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

வழிபாட்டுத்தலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்காக கட்டுமான பூசை நடத்த உத்தர பிரதேச மாநில அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதில், பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.அவரது வருகைக்காக அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில், இந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்பதற்காக பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அக்கட்சி தலைமை அழைப்பு விடுக்காமல் உள்ளது.இந்த விவகாரம் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில், அயோத்தியில் உள்ள புரோகிதருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அது போல, அம்மாநில தொழில்துறை அமைச்சர் கமலா ராணி வருணும் கொரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாவும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் பாஜகவினருக்குள்ளேயே பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ராமர்கோயிலை அரசியலாக்கி அதிகாரத்தைப் பெற வழி அமைத்தவர் அத்வானி. இப்போது அவரைப் புறக்கணிப்பதால் அவருடைய சாபமே உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து இவ்வளவு சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று பாஜகவின் ஒரு தரப்பினர் பேசிக்கொள்கிறார்கள்.

Leave a Response