ஜெர்மனியில் கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மருத்துவர்கள் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார்கள்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர்கள் இந்த நிர்வாண படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.பல மாதங்களாக, தாங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் கோரியும் எந்தப் பலனும் இல்லாததை ஜெர்மன் அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் அவர்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
எங்களிடம் இருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் செலவழிந்துபோனால், நாங்கள் இப்படித்தான் இருக்கவேண்டியிருக்கும் என்கிறார்கள் அவர்கள்.தங்கள் எதிர்ப்பை பிளாங்க் பெடென்கென் அல்லது நிர்வாண குவால்ஸ் என்று அழைக்கின்றனர்.
இப்போதைய கொரோனா பரவலின்போது, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிக்குச் செல்வது, நிர்வாணமாக வேலை செய்வதற்குச் சமம் என்கிறார்கள் அவர்கள்.இன்னொரு பக்கம், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை அதிகரித்தாலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருப்பதால், இன்னமும் அவற்றின் பற்றாக்குறை நீங்கினபாடில்லை.
முகக்கவசம், கண் கண்ணாடிகள், கையுறைகள் மற்றும் ஏப்ரன்களை மருத்துவர்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தபோதிலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனி மருத்துவர்களின் இந்தப் போராட்டம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.