காலம் உன்னைச் செருப்பால் அடிக்கும் – சுபவீ சீற்றம்

இன்றைய தினத்தந்தி நாளேட்டில் வெளியாகியுள்ள ஒரு கேலிச்சித்திரம் பேரறிஞர் அண்ணாவை இழிவு செய்திருப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…

படம் வரைகிறது ஒரு பார்ப்பனப் பாம்பு!
ஆழி சூழ் தமிழ்ப் பேரரசு என்னும் கனவு கண்ட –

நாம் தமிழர் என்னும் இயக்கம் நிறுவிய –

உழைக்கும் தமிழர்களுக்கான நாளேடு தந்த –

தமிழீழ விடுதலைக்குத் தன்னாலியன்றதை எல்லாம் செய்த –

அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அமைச்சரவையில் அவைத் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய –

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி ஏட்டில் உட்புகுந்து கொண்டு,

ஒரு பார்ப்பனப் பாம்பு –

பேரறிஞர் அண்ணாவின் சிலை போல் ஒரு படம் வரைந்து, முகத்தைக் கொரோனா கிருமியால் மூடி வைத்திருக்கிறது.

கேட்டால், அதில் அண்ணா என்று பெயர் எழுதவில்லை என்றோ, அது அண்ணா சிலை இல்லை என்றோ சொல்லக்கூடும்.

கண்ணுள்ளவனுக்கும், கருத்துள்ளவனுக்கும் அது அண்ணாவின் படம் என்று தெரியும்.

தன்மானமுள்ள தமிழர்கள் எல்லோருக்கும் தெரியும்.

கோடித் தமிழரின் நெஞ்சில் குடி கொண்டிருப்பவர் அண்ணா. அவரை இழிவுபடுத்த எந்த நாய்க்கும் உரிமையில்லை.

இது கொரோனா காலம். எனவே யாரும் எந்த எதிர்ப்புப் போராட்டமும் நடத்த முடியாது என்று தந்திரமும், நயவஞ்சகமும் நிரம்பிய புத்தி நினைத்திருக்கும்.

என் இயல்புக்கு மாறாக ஒன்றைச் சொல்கிறேன்.

படம் வரைந்தவனே, மன்னிப்பு கேள். இல்லையேல், காலம் உன்னைச் செருப்பால் அடிக்கும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response