கொரோனா எதிர்ப்புக்கு ஒருகோடி நிதி கொடுத்த தெலுங்குநடிகர்

கொரோனா கிருமி பரவாமல் தடுக்க இந்திய ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதற்காக 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி.

அதோடு கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். இத்தொகை போதுமானதல்ல என்று பலரும் அவரை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தெலுங்குநடிகர் பவன்கல்யாண், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி தருவதாக அறிவித்திருக்கிறார்.

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இத்தொகை என்று சொல்லியிருப்பதோடு கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமருக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறார்.

பவன்கல்யாண் ஒரு கோடி ஒதுக்கியிருப்பதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்துவருகிறார்கள்.

Leave a Response