இன்று இந்திய ஒன்றியமெங்கும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கிருமி பரவலைத் தடுக்கவே இந்த தனிமைப்படுத்தல் என்று அரசாங்கம் சொல்லியிருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஏராளமான வதந்திகளும் உலா வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் முதன்மையானது,
22.03.2020 இன்று இந்தியா முழுவதும் கொரானொ கிருமியை அழிக்க வானவூர்தியில்(ஹெலிகாப்டர் )வந்து மருந்து தெளிக்கிறார்கள் எனவே யாரும் வெளியே வரக்கூடாது என்பதுதான்.
அதுமட்டுமின்றி, கொரானொ எதிரொலியாக அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை விட்டதால் பிரதமர் மோடி குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ15000 தருகிறார் என்றும் வதந்தி உலாவருகிறது.
இவை இந்திய அளவில் என்றால், ஈரோடு மாவட்டத்தில்,கொரானொ எதிரொலியாக திருவிழா இரத்து செய்யப்பட்டதால் பண்ணாரி அம்மன் கழுத்தில் இருந்த தாலி அறுந்து விட்டது, ஆகையால் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கு போடவேண்டும்,
கொரானொ எதிரொலியாக ஈரோடு பெரியமாரியம்மன் பண்டிகை தள்ளி வைத்ததால் ஈரோட்டிற்குப் பெரும் ஆபத்து வரும்.
சமயபுரம் மாரியம்மன் பச்சை வண்ணமாக மாறிவிட்டது வீட்டு வீட்டுக்கு வேப்பிலை கட்டி விளக்கு போடவேண்டும்
ஆகிய வதந்திகள் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.
உடனே வயது பேதமின்றி எல்லாப் பெண்களும் அதை ஏற்றுக் கொண்டு வாசலில் விளக்கேற்றி கோலம் போட்டு வேப்பிலைகளைப் பரப்பி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
– அ.தமிழ்ச்செல்வன்