நாளை மக்கள் ஊரடங்கு – டாஸ்மாக் நிலை என்ன? அமைச்சர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது பற்றியும், இந்த விசயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அப்போது, மக்கள் தங்களைத் தனிமைப் படுத்துவதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பேருந்துகள் மற்றும் தொடர்வண்டிகள் ஓடாது என்றும், அங்காடிகள், கடைகள், உணவு விடுதிகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், தமிழகத்தில் மதுபானங்கள் விற்கும் டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

Leave a Response