யெஸ் வங்கி திவாலாக காரணம் இவர்கள்தாம் – அதிரவைக்கும் பட்டியல்

யெஸ் வங்கிக்கு தற்போது நாடு முழுவதும் 1,122 கிளைகளும், 1,220 ஏடிஎம்களும் உள்ளன. நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றும் முன்னோடி வங்கியாக இது திகழ்ந்தது. ஆனால் இன்று இவ்வங்கி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

ஓராண்டில் மட்டும் யெஸ் வங்கி பங்குகள் 80 சதவீத அளவுக்குச் சரிந்துவிட்டன. இது மேலும் சரிந்து திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்படும் முன்பு ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் யெஸ் வங்கி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யெஸ் வங்கியில் இதுவரை 2.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர். வங்கி இதுவரை 2.25 லட்சம் கோடி அளவிற்கு வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்கியுள்ளது.

இந்தியாவின் 5வது வங்கியாக இருந்த யெஸ் வங்கி தற்போது வராக்கடன்களால் திவாலாகியுள்ளது.HDFC, KOTAK MAHINDRA போன்ற வங்கிகளைப் போன்று வளர வேண்டும் என்ற ஆசையில், கடன்களை வாரி வழங்கியுள்ளார் Yes வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர்.

இதன் விளைவாக, 8,373 கோடி வாராக்கடன்களாக ஆகியது. இதில், 44 பெரிய கம்பெனிகள், 10 கார்ப்ரேட் குழுமங்களும் அவர்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை.

அதில், குறிப்பாக முதலாவதாக, அனில் அம்பானி 12,800 கோடி ரூபாயையும், எஸ்எல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா 8,400 கோடியையும் திரும்பச் செலுத்தவில்லை. இந்த இருவரிடம் மட்டும் 21,200 கோடி வராக்கடன் ஆகியுள்ளது.

மற்ற நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், திவான் ஹவுசிங் பினான்ஸ் 4,735 கோடியும், ஐ.எல்.எப்.எஸ் 2,500 கோடியும், ஜெட் ஏர்வேஸ் 1,100 கோடியையும் பெற்றுள்ளது.

Cox & kings 1,000 கோடியும், ஓம்கார் ரியாலிட்டி 2,710 கோடியும், பி எம் கெய்தான், பாரத் இன்ப்ரா 1,250 கோடியும், ரேடியஸ் டெவலப்பர் 1,200 கோடியும் பெற்று திருப்ப செலுத்தவில்லை. இவை அனைத்தும் சேர்த்து 34,000 கோடி வராக்கடன்களாக உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Response