இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் நுழையும் பாஜக

இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி.47 வயதாகும் கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் பிசிசிஐ எனப்படும் இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடுகிறார்.அந்த வாரியத்தின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

கங்குலி பிசிசிஐ தலைவராக வரும் பட்சத்தில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே என நிர்வாகிகள் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். புதிய பொருளாளர் பதவிக்கு பிசிசிஐயின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் துமால் போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார்.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றாலும், வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

Leave a Response