சீன அதிபர் வருகையில் அமுங்கிய ரஜினி பட அறிவிப்பு

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களை இயக்கியவர் சிவா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீர் மாற்றமாக, சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கத்தில்,

எந்திரன்’ மற்றும் ‘பேட்ட’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினி – சன் பிக்சர்ஸ் கூட்டணி இணைகிறது. ரஜினியின் 168 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை சிவா இயக்கவுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 11 அன்று காலை 11 மணிக்கு இந்தச் செய்தி வெளியானது. வழக்கமாக ரஜினி பட அறிவிப்புகள் பெரிதாகப் பேசப்படும். நேற்று சீன அதிபர் தமிழகத்துக்கு வந்ததால் ரஜினியின் புதுப்படச் செய்திக்கு வரவேற்பு மிகக்குறைவாகவே இருந்தது.

Leave a Response