எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வைகோ விருது

நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் இயற்றமிழ் வித்தகர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இயற்றமிழ் வித்தகர் விருது, ‘காவல்கோட்டம்’ எனும் காவியத்தை எழுதி, சாகித்ய அகாதமி விருதுபெற்றவரும், ‘வேள்பாரி’ எனும் தமிழ்க் காவியத்தை எழுதியவரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுக்கு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்….

நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் இயற்றமிழ் வித்தகர் விருது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு வழங்கப்படுகிறது.மன்றத்தின் தலைவர் வைகோ இந்த விருதை வழங்குகிறார்.

இவ்விழா செப்டம்பர் 7 ஆம் நாள் மாலை 5 மணி அளவில் எழும்பூர் சிராஜ் மகாலில் நடைபெறுகிறது.

விழாவுக்கு பைந்தமிழ் மன்றத்தின் புரவலர் பஹ்தூர் ரப்பானி முன்னிலை ஏற்கிறார்.பைந்தமிழ் மன்றத்தின் செயலாளர், வரலாற்று ஆய்வாளர் செ.திவான் வரவேற்புரை ஆற்றுகிறார்.
மன்றத்தின் பொருளாளர் குட்டி (எ) சண்முகசிதம்பரம் நன்றியுரை ஆற்றுகிறார்.

மன்றத்தின் துணைத் தலைவரும், தலைசிறந்த எழுத்தாளருமான மதுரா அவர்களும் மற்றும் தமிழ் அறிஞர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

Leave a Response