பாஜக அரசு டெல்லியை ஆளத்தொடங்கியது முதல் தமிழுக்கும் தமிழகத்துக்கும் அழிவு ஏற்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது.
மோடி இரண்டாம் முறையாகப் பிரதமரானபோது தமிழகத்தின் பிரதிநிதியாக ஒரு அமைச்சர் கூட மத்திய அமைச்சரவையில் இல்லை.
ஆனால் தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கின்ற பல செயல்பாடுகள் தொடர்ந்து மத்திய பாஜக அரசால் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டின் நிர்மலா சீதாரமன் அவர்கள் முதன்மையான பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்டு திறம்பட செயலாற்றி வருகிறார் என்று பாஜகவின்ர் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பாராளுமன்றம் கூடி உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூன் 17 ,18 ஆகிய நாட்களில் நடந்தது.
அப்போது பாஜகவின்ரால் தமிழர் மற்றும் தமிழகத்தின் பிரதிநிதி என்று சொல்லப்பட்ட நிர்மலா சீதாராமன் கன்னடத்தில் பேசி பதவியேற்றுள்ளார்.
இதனால் அவரை தமிழர் என்று சொன்னவர்கள் எல்லாம் வெட்கித் தலைகுனிய நேர்ந்திருக்கிறது.