செல்லுமிடமெல்லாம் கறுப்புக் கொடி – மோடி அதிர்ச்சி

அருணாச்சல பிரதேசம், திரிபுரா, அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வருகிறார்.

அவர் போகிற இடங்களிலெல்லாம் மோடியே திரும்பிப்போ என்கிற எதிர்ப்புக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

அசாமில் மோடியின் வாகனத்தின் அருகிலேயே சென்று அவருக்குக் கறுப்புக்கொடி காட்டினர்.

நாளை அவர் தமிழகம் மற்றும் ஆந்திரா வருகிறார். இதனால் தமிழகத்தில் வழக்கம் போல மோடியே திரும்பிப் போ என்கிற ஹேஷ்டேக் நிரம்பி வழிகிறது.

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவிலும் ‘GO BACK MODI’ பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை ஆந்திராவுக்கு வரவுள்ள நிலையில் ‘GO BACK MODI’ பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் விஜயவாடா வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. நாளை விஜயவாடாவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க மோடி வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல் பாஜகவினரையும் மோடியையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்கிறார்கள்.

Leave a Response