மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு உலக அளவில் முதலிடம் பிடித்த மோடியே திரும்பிப்போ

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓவியர் மருது வரைந்துள்ள ஓவியம்

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த விழாவைத் தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணிக்கு, மதுரை வருகிறார். மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மோடி கொச்சிக்கு செல்கிறார்.

மோடியின் தமிழக வருகையை யொட்டி, ட்விட்டர் தளத்தில்
மோடியே திரும்பிப்போ என்கிற பொருளில் #GoBackModi #GoBackSadistModi ஆகிய ஹேஷ்டேக்குகளில் ஏராளமானோர் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #GoBackModi ஹேஷ்டேக் உலக அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது.

இதற்கு எதிர்வினையாக பாஜகவின் தொழில்நுட்பப்பிரிவு மோடியே வருக எனும் பொருளில் #TNWelcomesModi #MaduraiWelcomesModi ஆகிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்வீட் செய்து வருகிறது.

Leave a Response