திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்….
வருகின்ற சனவரி 28 அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்கிறது.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தேர்தல் களப்பணிகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இவர் பொடா மற்றும் தேசியப்பாதுகாப்புச்சட்டம் ஆகியனவற்றில் சுமார் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.