சுயசாதிக் கௌரவத்தின்அங்கீகாரமா விருதுகள்?-லட்சுமிமணிவண்ணன்

சாகித்ய அகாதமி நாகர்கோயிலில் நடத்துகிற புத்தக வாரவிழாவுக்குச் சென்று திரும்பினேன்.மழையின் காரணமாக தாமதமாகச் சென்றேன்.மழை போகவே அனுமதிக்காத அளவுக்கு ஓங்கிப் பெய்வதுதான் நல்லதுபோல் தோன்றுகிறது.

சுயசாதி அங்கீகாரத்துக்குக் கிடைக்கிற பெருமைகள்தான் விருதுகள் என்கிற தொனியில் பொன்னீலன் பேசுகிறார்.இப்படி கூச்சமேயில்லாமல் ஒருவர் பொதுவில் பேசுவதை எல்லோரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு வேறு இருக்கிறார்கள்.எப்படியென விளங்கமாட்டேன் என்கிறது.அவர் எழுதியது,அவர் பரிசுகள் பெறுவதெல்லாம் அவரது சமூகத்திற்கான அங்கீகாரம்?

ஜோடி.குருஸுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததைப்பற்றி,இனி எங்கள் சமூகத்தை எவனுமோ அசைக்க முடியாது என பெருமிதத்தோடு அவரது சமூகத்தை சேர்ந்தவர் சொன்னாராம்.அதுபோல ஒரு கவிதையை வாசித்துவிட்டு அதற்கு விருதுவழங்கப்பட்டால் நாவிதர் சமூகம் பெருமைப்படும் என்கிறார்.இது ஒரு அன்கான்ஷியஸ் பேச்சு என வைத்துக் கொண்டாலும்கூட இந்த முட்டுச்சந்துக்கு எப்படி வந்து சேர்ந்தோம்? மௌனம் இதை ஒப்புகொள்கிறதா?சுயசாதியின் பெருமைக்கு கிடைக்கிற அங்கீகாரமா, எழுத்துக்குக் கிடைக்கிற விருதுகள்?

தமிழில் அடையாள அரசியலும்,சமூக சரிதைகளை எழுத்து,நாவல்.இலக்கியம் என நம்பிக்கை கொண்டிருப்போரும் உண்டி பெருத்திருப்பதே இத்தகைய அபத்தங்களுக்குக் காரணம்.

காலச்சுவடு கண்ணனும் , நெய்தல் கிருஷ்ணனும் பரவாயில்லை.இதுபோல அவர்கள் எதனையும் உளறிக் கொட்டவில்லை.அவர்கள் நினைப்பதை எழுதி வாசித்து விட்டார்கள்.இனியெல்லாம் பொதுவில் ஒருவர் உளறவில்லை என்பதற்கேகூட அவர்களைப் பாராட்டித்தான் தீரவேண்டும் என்கிற நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது!கஷ்டம்தான் பாராட்டித்தீரவேண்டும்

Leave a Response