5 மாநில தேர்தல் முடிவுகள் – ரஜினி கமல் கருத்து மக்கள் வியப்பு

பாஜக ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆட்சி செய்த மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டம்ன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது.

இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. பாரதீய ஜனதா ஆட்சியை இழந்து உள்ளது.

இந்த நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதா செல்வாக்கு இழந்ததையே இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என கூறினார்.

அதேபோல நடிகர் கமல் தந்து ட்விட்டர் பக்கத்தில்,

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது.

என்று பதிவிட்டுள்ளார்.

இருவரும் திடீரென பாஜகவுக்கு எதிராகக் கருத்துச் சொல்லியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response