சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி – ரஜினி கருத்து

பேட்ட படத்தின் படப்பிடிப்பை முடித்து கொண்டு வாரணாசியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும். காலம் காலமாக உள்ள சம்பிரதாயத்தை மாற்றுவது சரியல்ல. டிசம்பர் 12ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கவில்லை, அதே சமயத்தில், கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90% முடிவடைந்துவிட்டன. மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது. பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என கூறி உள்ளார்.

Leave a Response