எச்.ராஜா ஏன் இப்படி பச்சைப்பொய் பேசுகிறார்?

இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செப்டம்பர் 18 அன்று எச்.ராஜாவுக்கெதிராக போராட்டம் நடத்தினர். அதுபற்றி அப்பட்டமான பொய் ஒன்றை எச்.ராஜா பேசியிருக்கிறார்.

அதை அம்பலப்படுத்துகிறார் பிபிசி செய்தியாளர் முரளிதரன். அவருடைய பதிவில்….

எச். ராஜா ஏன் இப்படிப் பொய் சொல்கிறார்?

இன்று இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், அர்ச்சகர்கள் அனைவரும் தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் நேரத்தில் போராட்டம் ஒன்றை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திங்கட்கிழமை மாலையில் பேசிய பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, “அறநிலையத் துறை அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பெண்களை விலைபேசி விற்பவர்கள்” என்று கூறினார்.

இந்தச் செய்தி தினகரனின் இன்றைய திருச்சிப் பதிப்பில் 6 பத்தி செய்தியாக வெளியானது. எச். ராஜாவின் இந்தப் பேச்சைக் கண்டித்தே அதிகாரிகளும் அர்ச்சகர்களும் பணியாளர்களும் பிற்பகல் நேரத்தில் பேராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் எல்லாக் கோவில்களிலும் நடை சாத்தப்பட்டிருக்கும். படத்தில் உள்ள பேனரில் போராட்டம் எதற்காக நடக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், எச். ராஜாவின் ட்வீட்டில், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலில் சிலை கடத்தல் வழக்குகளில் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அதனால் கோவில்களில் பூஜைகள் பாதிக்கப்பட்டதாகவும் பொய் சொல்கிறார். மதியம் ஒன்றரை மணிக்கு எந்தக் கோவிலில் அர்ச்சனையும் அபிசேகமும் நடக்கிறது? இவர் எப்போதாவது கோவிலுக்குப் போயிருக்கிறாரா?

“ஹைகோர்ட்டாவது. மயிராவது.” என்று பேசியவர், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் என்று கோர்த்துவிடுகிறார். பொய் சொல்லும்போது அவருக்கே கூசாதா?

இப்படித்தான் மனுஷ்யபுத்திரனின் கவிதையும் வைரமுத்துவின் பேச்சும் இந்துக்களை அவமதிப்பதாக கூவினார். இந்துக்களின் உண்மையான அவமானச் சின்னம் யார் என்பது தெய்வ நம்பிக்கையுள்ள, சத்தியத்தின் மீது நம்பிக்கையுள்ள இந்துக்கள் அனைவருக்கும் இப்போது தெரிந்திருக்கும்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response