பெ.மணியரசன் மீது கொடூர தாக்குதல் – தஞ்சையில் பரபரப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜூன் 11 அன்று சென்னையில் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக தஞ்சாவூரிலிருந்து ஜூன் 10 இரவு புறப்பட்டிருக்கிறார்.

வீட்டிலிருந்து தொடர்வண்டி நிலையம் நோக்கி இரண்டு சக்கர வாகனமொன்றில் அமர்ந்து வந்திருக்கிறார்.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் , ஓடுகிற வண்டியிலிருந்து கையைப் பிடித்து முறுக்கி கீழே தள்ளிவிட்டுவிட்டார்களாம்.நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தள்ளியவர்கள் நிற்காமல் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

திட்டமிட்டே இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்திருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் பிரச்சினைகளுக்காகத் தீவிரமாகப் போராடிவருகிறவர்கள் மீது இப்படி தாக்குதல்கள் நடப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

Leave a Response