சத்யபாமா எம்பி யின் விடாமுயற்சிக்கு வெற்றி – ஈரோடு திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி

தொழில்நகரங்களான ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களின் பயன்பாட்டுக்காக கோவை- பெங்களூரு இடையே, திருப்பூர், ஈரோடு வழியாக புதிய தொடர்வண்டி ஒன்றை இயக்கக் கோரி அத்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா. மேலும், நாடாளுமன்றத்திலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பேசினார்.

அவருடைய விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

கோவையிலிருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் உதய் விரைவு வண்டி, திருப்பூர், ஈரோடு வழியாய் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்போடி நின்று விடாமல் அது செயல்பாட்டுக்கும் வந்துள்ளது.

ஜூன் 8, 2018 அன்று ‘உதய் எக்ஸ்பிரஸ் ரயில்’ இயக்கம் துவக்கப்பட்டது. திருப்பூர் வந்த உதய் ரயிலை திருப்பூர் எம்.பி சத்யபாமா வரவேற்றார். இந்நிகழ்வில், ரயில்வே கோட்ட மெக்கானிக்கல் இன்ஜினியர் ராஜாமணி, நிலைய மேலாளர் சுனில் தத், உதவி மேலாளர் முத்துக்குமார், முன்னாள் மண்டல தலைவர் ஜெ.ஆர்.ஜான், ரோட்டரி சக்திவேல், முயற்சி சிதம்பரம், சைமா கோவிந்தப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பின்பு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா கூறியதாவது…

தொகுதி மக்களின் நன்மைக்கான நீண்டநாள் தொடர் கோரிக்கைக்குச் செவி சாய்த்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கோவை – KSR பெங்களூரு வரை புதிய ” உதய் விரைவு ரயில்” No. 22666 இயக்க அனுமதித்து, 08.06.2018 முதல் தொடக்கி வைப்பதற்கு கொங்கு மண்டல மக்கள் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்புதிய இரண்டடுக்கு கோவை – பெங்களூரு விரைவு ரயில் திருப்பூர், ஈரோடு வழியாய் இயக்கப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஆற்றலையும் தருகிறது என்பதை இத்தருணம் பதிவு செய்கிறேன்.

மாணவர்கள், விவாசாயிகள், வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

இவ்வாறு அவர் கூறினார்.

இரு பெரும் தொழில் நகரங்களுக்குப் பலன் தரும் கோரிக்கையை விடாமல் போராடி நிறைவேற்றியமைக்காக சத்யபாமாவுக்கு தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response