தூத்துக்குடி காவல்துறையின் கொடூர தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று சந்தித்தார் நடிகர் ரஜினி.
அப்போது நடந்த ஓர் நிகழ்வு….
கலவரத்தில் காயப்பட்ட இளைஞர் எந்த ஒரு பரபரப்புமின்றி மெல்ல எழுகிறார்: யாரு நீங்க?
ரசினி: நான் தான் ரஜினிகாந்த்
இளைஞர் : அது தெரியுது அது தெரியாமையா?
ரசினி: சரிங்க சரிங்க (பலவீனமாக சிரிக்கிறார்)
இளைஞர் : நூறு நாள் போராடினோமே அப்ப நீங்க வரலேயே… நீங்க தான் ரஜினிகாந்துன்னு தெரியாதா?
ரசினி:” சரிங்க சரிங்க” என கைக்கூப்பி நகர துவங்க
காயம்பட்ட இளைஞர் எந்த பரபரப்பும் இன்றி மீண்டும் படுக்கையில் சரிகிறார்.
என்னைப் பார்த்து சந்தோசப்படுவார்கள் என்று ரஜினி சொன்னார். ஆனால் அவரைப் பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் கோபப்பட்டுள்ளார்கள் என்று இதன்மூலம் தெரிகிறது.