சத்தியபாமா எம்பியிடம் சொன்னால் நடக்கும் – விசைத்தறியாளர்கள் நம்பிக்கை

தமிழகத்தில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கிவருகின்றன.

அண்மைக் காலமாக, ஜிஎஸ்டி வரி, தினமும் மாறும் நூல்விலை மற்றும் புதிதாகப் பரவிவரும் தானியங்கி விசைத்தறிகள் ஆகியனவற்றால் விசைத்தறித் தொழில் நலிவடைந்து வருகிறது.

இவற்றிலிருந்து விசைத்தறித் தொழிலை மீட்க மத்திய அரசு மனம் வைக்கவேண்டுமென்கிறார்கள் விசைத்தறி உரிமையாளர்கள்.

இதற்காக,ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் சார்பில் இன்று (20-05-18) திருப்பூர் நாடாளுமன்றம் உறுப்பினர் சத்தியபாமாவைச் சந்தித்து விசைத்தறி நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்துள்ளனர்.

அதில்,

1)விசைத்தறிக்கான தனி இரக ஒதுக்கீடு.

2)ஜி.எஸ்.டி. தொடர்புடைய திரட்டப்பட்ட உள்ளீட்டுக் கடன். திரும்பப் பெற ஆவண செய்தல்.

3)மாதமொரு முறை நூல் விலை நிர்ணயம்

ஆகிய கோரிக்கைகள்

வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கை மனுவை சத்தியபாமா எம்பியிடம் கொடுத்தது எதனால்? என்று கேட்டபோது,

திருப்பூர் பனியன் தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல் உட்பட பலவேறு மக்கள் நலப் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்களை உடனடியாகச் சந்தித்து சிக்கல்களை எடுத்துச் சொல்லி அவற்றிற்கு நல்ல தீர்வு காண்பதில் முன்னோடியாக இருக்கிறார் சத்தியபாமா.

இவரிடம் மனு கொடுத்தால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு உடனே சென்று சேரும், அதனால் விரைவில் தீர்வு கிடைக்கும் வாய்ப்புண்டு என்பதால் இவரிடம் மனு கொடுத்தோம் என்கிறார்கள்.

எம்பியும், உடனே டெல்லி சென்று அமைச்சரைச் சந்தித்து உங்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காண முயல்கிறேன் என்று உறுதியளித்துள்ளாராம்.

தொகுதி மக்கள் நம்பி நாடி வருகிற மக்கள் பிரதிநிதியாக சத்தியபாமா இருக்கிறார் என்பதற்கு இது சான்று என்கிறார்கள்.

Leave a Response