ரஜினி பற்றி புதிய வதந்தி – இதற்காவது மசிவாரா?

ரஜினி கட்சி தொடங்கினால் அவர் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கலாம் என்பது பாஜகவின் கணக்கு என்று சொல்லப்படுகிறது.

ஆனால், ரஜினி ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி கட்சி தொடங்குவதைத் தள்ளிப் போடுகிறார்.

அண்மையில் காலா பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, கட்சி தொடங்க இன்னும் காலம் கைகூடவில்லை என்றார்.

அடுத்தநாள் ரசிகர்களிடம் பேசும்போது, தெருவுக்குப் பத்து பேராவது சேர்ந்தால்தான் கட்சி தொடங்குவேன் என்றார்.

இதனால் இவர் கட்சியே தொடங்கமாட்டார் என்பதை உணர்ந்த பாஜக, அடுத்த கட்டமாக, ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கிறது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது என்று சொல்லப் போகிறார்களாம்.

இதற்காவது ரஜினி மசிவாரா? என்பது போகப்போகத் தெரியும்.

Leave a Response