நீட் தேர்வில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி – த வா க அதிரடி

நீட் தேர்வைக் கண்டித்தும், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுத அனுமதி அளிக்க வலிறுத்தியும் சேலம் காந்தி ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்குள் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் உள்ளே புகுந்து முற்றுகைப் போராட்டம் செய்ததோடு வருமான வரித்துறை அலுவலகத்தின் கேட்டை இழுத்துப் பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது சேலம் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் மாணவரணிச் செயலாளர் கவியரசு ஜெனரேட்டர் மீது ஏறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அஸ்தம்பட்டி காவல்துறையினர் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 8 நிர்வாகிகளைக் கைது செய்து கூட்டிச் சென்றார்கள்.

மத்திய அரசு அலுவலகத்தைப் பூட்டும் போராட்டம் இனி நாடெங்கும் நடக்கும் என்று அக்கட்சியிளர் கூறுகிறார்கள்.

Leave a Response