அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி – சேரன் டிவிட்டர் பதிவு

ட்விட்டர் பக்கத்தில் இணைந்ததிலிருந்து தமிழகத்தில் நிலவிய அரசியல் மாற்றங்கள் மற்றும் ரஜினி – கமலின் அரசியல் வருகை உள்ளிட்டவற்றுக்கு தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்தவர் இயக்குநர் சேரன்.

இந்நிலையில் இனிமேல் அரசியல் பதிவு இடுவதில்லை என்று அறிவித்திருக்கிறார் இயக்குநர் சேரன். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சேரன் கூறியிருப்பதாவது:

நண்பர்களே.. இனி அரசியல் சார்ந்து எந்த பதிவுகளும் நான் பதிவிடப்போவதில்லை.. யாரைப்பற்றியும் பேசப்போவதில்லை..சினிமா சார்ந்து மட்டுமே பேசுவோம்.எனக்கும் எந்தஅரசியல் கடைகளுக்கும் சம்பந்தம் இல்லை. நான் சென்னைவந்தது சினிமாஎடுக்க அந்தவேலையை மட்டும்பார்க்கிறேன். என்கருத்துகள் இனிதிரையில்.அண்ணன் சீமான் அவர்களும் அவர்களின் அன்புத்தம்பிகளும் எனக்கு இந்த ஞானத்தை புத்தியை கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி.

இவ்வாறு சேரன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Response