விஜய்சேதுபதி படத்தில் துல்கர் பட நாயகி..!


இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் ‘ஜூங்கா’. இதற்கு முன் விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தையும், நடிகர் கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். ‘ஜூங்கா’ படத்தின் படப்பிடிப்பு பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாயிஷா சைகல் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தில் இன்னொரு கதாநாயகியாக ‘சோலோ’ படத்தில் நடித்த நேகா சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர்.

கடந்த மாதம் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் காரணமாக ஒருநாள் மட்டுமே சோலோ படம் தமிழகத்தில் ஓடியதால் நேகா சர்மாவால் ரசிகர்களிடம் ரீச்சாக முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது

Leave a Response