மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக படுதோல்வி


*மகாராட்டிரம்: மாநகராட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி!*

*மகாராட்டிர மாநிலம் நான்டெட் வகாலா மாநகராட்சித்தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 81 இடங்களில் வெறும் 2 இடங்கள் மட்டுமே அக்கட் சிக்குகிடைத்துள்ளது.அதே நேரம் காங்கிரசு 69 இடங் களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.*

*மகாராட்டிர மாநிலத்தில், நான்டெட் வகாலா மாநகராட் சிக்கும், பிர்கான் மும்பை, புனே, கோல்காபூர், நாக்பூர் ஆகிய மாநகராட்சிகளில் காலி யாக உள்ள இடங்களுக்கும் புதன்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது. இதில், நான்டெட் வகாலா மாநகராட்சியில் 41 இடங்கள் பெண்களுக்கும், 15 சதவிகித இடங்கள் பட்டியல் வகுப்பினருக்கும், 2 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும், 22 இடங்கள் பிற்படுத்தப்பட் டோருக்குமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இத் தேர்தலில் சுமார் 3 லட்சத்து 96 ஆயிரம் (60 சத விகிதம்) வாக்குகள் பதிவாகின. வியா ழக்கிழமையன்று வாக்குகள் எண்ணப்பட்டன.*

*இதில்,நான்டெட் வகாலா மாநகராட்சியில், ஆரம்பம் முதல் காங்கிரசு அதிகமான வார்டுகளில் முன்னிலை பெற்றது. பிற்பகல் வரை, காங்கிரசு 45 இடங்களிலும், சிவசேனா 14 இடங்களிலும், தேசியவாத காங்கிரசு 10 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்த நிலையில்,பாஜக வெறும் 2 இடங்களில் மட் டுமே முன்னிலை பெற்றது. இறுதியில்மொத்தமுள்ள81 இடங்களில்காங்கிரசுமட் டும்69இடங்களைப்பெற்று நான்டெட்வகாலா மாநகராட் சித் தேர்தலில், பாஜகவை படு தோல்வி அடையச் செய்தது.நான்டெட்காங்கிரசுக்குசெல் வாக்கான பகுதி என்றா லும்,இந்தமுறைஎப்படியும் நான்டெட் வகாலா மாநகராட் சியைகைப்பற்றிவிடுவது என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.*

*ஆனால், அது எடுபடாமல் போய் விட்டது.அண்மையில் மகாராட்டிர மாநிலத்தில் 16 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில்,பாஜக13நகராட் சிகளை கைப்பற்றி இருந் தது. காங்கிரசுக்கு 2 இடங் களும்,சிவசேனாவுக்குஒரு இடமும் மட்டுமே கிடைத் திருந்தன.இந்நிலையில், நான்டெட்வகாலாமாநகராட்சி யில் பாஜக அடைந்துள்ள படுதோல்வி, அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிர்கான் மும்பை, புனே, கோல்காபூர், நாக்பூர் மாநக ராட்சிகளில்நடைபெற்ற இடைத் தேர்தலில் 4 இடம் கிடைத்துள்ளது, பாஜக-வினரை ஆறுதல்படுத்தியுள்ளது.

Leave a Response