அதிமுகவின் முடிவுகளை மோடி எடுப்பதா? – கட்சியினர் கொந்தளிப்பு


தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களோடு இன்று பிரதமர் மோடியை சந்தித்தது பலத்த விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

துணை முதல்வராக இருந்தும் தனக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என்பது ஓபிஎஸ் சின் குற்றச்சாட்டாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது ..

பெரும் ஆளுமைகளாக இருந்து அதிமுக வை வழிநடத்திய எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காப்பாற்றப்பட்ட
அதிமுக வின் முடிவுகளை
பாஜக வின் தலைமை முடிவெடுப்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா ? என்கிற கேள்வி எல்லோராலும் எழுப்பப்படுகிறது.

Leave a Response