புது ஏரியாவில் அடியெடுத்து வைத்த சமந்தா..!


திருமணம் நிச்சயமாகி விட்டதால் கவர்ச்சி கதாபாத்திரங்களை விலகிவிட்டு, மாறாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார் சமந்தா .அதுமட்டுமல்ல, இதற்கு முன்பு காமெடி காட்சிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாத சமந்தா இப்பொது அந்த ஏரியாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளாராம்.

தற்போது மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘இரும்புத்திரை’ படத்தில் முதன்முறையாக பல காமெடி காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் நடித்துக்கொண்டிருக்கிறார். காமெடி காட்சிகளில் அவருடன் ரோபோ சங்கர் நடிக்கிறார். சமந்தா- ரோபோ சங்கர் தோன்றும் காமெடி காட்சிகளுக்கு தியேட்டர்களில் பெரிய கைதட்டல் கிடைக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்..

Leave a Response