“பாலுமகேந்திரா இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்க மாட்டேன்” ; அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன்..!


மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா ஆரம்பித்து நடத்திவந்த ‘சினிமா பட்டறை’ என்கிற பயிற்சி பள்ளியில் பயின்று முதல் மாணவனாக வெளிவந்து ‘தப்பு தண்டா’.. என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் ஸ்ரீகண்டன்..

ஆனால் பாலுமகேந்திரா பாணியில் கலைப்படமாகவோ, உணர்வுப்பூர்வமான படமாகவோ இதை அவர் இயக்கவில்லை. பக்கா கமர்ஷியல் படமாக இதை இயக்கியுள்ளார் ஸ்ரீகண்டன்.. தேர்தல் நேரத்தில் நடக்கும் பணப்பட்டுவாடாவையும், அதனை பிடிக்க தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் பின்னணியாக வைத்து தப்பு தண்டா படம் தயாராகியுள்ளது.

இந்தப்படத்தின் முதல்பாதி டார்க் காமெடியாகவும், இரண்டாவது பாதி க்ரைம் த்ரில்லராகவும் உருவாக்கி இருக்கிறதாம். சத்யா, ஸ்வேதா கய் என்ற புதுமுகங்கள் படத்தின் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய மொட்டைத்தலை அஜய்கோஷ் இதிலும் போலீசாக தனது மிரட்டலை தொடர்கிறார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஸ்ரீகண்டன், “பாலுமகேந்திரா சார் உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை இயக்கி இருக்கவே மாட்டேன்” என கூறினார்.. இந்த நிகழ்வில் பேரதிசயமாக பாலுமகேந்திராவின் துணைவியார் அகிலாம்மாள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

Leave a Response