ஆர்கே நகர் தேர்தல் இரத்து, தினகரனைக் கண்டு மோடி மிரண்டதே காரணம்


சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை இரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 9 ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் தேர்தல் இரத்து உத்தரவில் கையெழுத்திட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து நாம்தமிழர்கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில்,

தினகரனை கண்டு மிரளுகிறார் மோடி.

அதிமுக வின் இடத்தை தமிழ்நாட்டில் பிடித்துவிட துடிக்கிறது பா.ஜ.க . “எங்கள் அடுத்த இலக்கு தமிழ்நாடுதான்” என்று வெளிப்படையாக அறிவித்து களம் வந்தது பா.ஜ.க.

“இன்னும் 25 ஆண்டுகளுக்கு பா.ஜ.க வை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன்” என அறிவித்து களம் கண்டார் தினகரன்.
நேரடிப் போட்டியில் உறுதியாக வெல்லமுடியாது அதுமட்டுமல்லாது மிகக் கேவலமான ஒரு தோல்வியைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்ததும் அவசர அவசரமாகத் தேர்தலை நிறுத்திவிட்டது மோடி அரசு!

இதற்கு தேர்தலில் பணப்புழக்கம் காரணமாக சொல்லப்படுகிறது.

உண்மையில் RK நகர் தொகுதியில் அதிமுக 4 ஆயிரம், திமுக 2 ஆயிரம், OPS அணி 3000, BJP 1000 என பணப்பட்டுவாடா நடந்துள்ளது. இது உலகம் முழுவதும் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாவிட்டாலும் அந்த தொகுதியின் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

நேர்மையை விரும்புகிற அரசு இந்த 4 வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்தி மாண்புமிகு ஜனநாயகத்தை நிலைநிறுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து தினகரனிடம் தோற்றுவிடுவோம் என்று பயந்து நடுங்கும் மோடியின் பேடித்தனம் அருவருப்பானது.

தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள தொகையை பரப்புரைக்காக நாம்தமிழர் கட்சி செலவு செய்துள்ளது. இப்போது தேர்தல் ரத்து. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் போது நாங்கள் எப்படி பரப்புரை செய்வது? மீண்டும் ஒருமுறை இந்த செலவுகளை எப்படி சுமப்பது? நாம் என்ன குற்றம் செய்தோம்? எதற்காக எமக்கு தண்டனை?

தேர்தலை இரத்து செய்த தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளிடமும் மன்னிப்புக் கோரி அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் பரப்புரைக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை வழங்கவேண்டும்.

நேர்மையான வகையில் தேர்தலை நடத்த துப்பில்லை என்றால் போய் புடுங்குகிற வேலையை இந்த தேர்தல் அதிகாரிகள் என்னும் பொறம்போக்குகள் செய்யலாம். இவர்களின் கையாலாகாத்தனத்துக்கு மாற்றத்தை விரும்பி உயிரை உருக்கிப் போராடும் கட்சிகள் பலியாக வேண்டுமா???

நேரடியாக மோத முடியாத BJP கொல்லைப்புறம் வழியாக குடியேற பார்க்கிறது!
“BJP மட்டும்தான் போட்டியிட முடியும்” என்று ஒரு விதியை கொண்டுவந்து கூட தேர்தல் நடத்திப் பாருங்கள்… அப்போது கூட தமிழ்நாட்டில் BJP வெல்லாது…

மக்கள் தெளிவடைய வேண்டும்… இந்த ஜனநாயக விரோத மோடி அரசை எதிர்த்து தமிழகம் திரள வேண்டும்!!
////”பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்”… மோடி ஆள்கிறார், தேர்தல் கமிஷன் தின்கிறது!!////

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response