டொனால்ட் டிரம்ப் கட்சியில் மின்னஞ்சல் கண்டுபிடித்த தமிழர்

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் செனட் சபைக்கு அடுத்த ஆண்டு சில தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக மின்னஞ்சலைக் கண்டுபிடித்த அமெரிக்க வாழ் தமிழர் சிவா அய்யாத்துரை அறிவித்துள்ளார்.

அங்கு தற்போது செனட் சபை உறுப்பினராக ஜனநாயகக் கட்சியின் எலிசபெத் வாரன் என்ற பெண் உள்ளார். அவர் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிட உள்ளார்.

அவரை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் சிவா அய்யாத்துரை களம் இறங்குகிறார்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அவர் குறிப்பிடுகையில், ‘‘நான் எனது 7–வது பிறந்த நாளின்போது, 1970–ம் ஆண்டு இந்தியாவை விட்டு அமெரிக்கா வந்தேன். ஒரு குழந்தையாக எனது பெற்றோரிடம் இருந்தும், ஆசிரியர்களிடம் இருந்தும், பயிற்சியாளர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். நான் உண்மையைக் கற்றுக்கொண்டேன். அதையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உண்மைக்காகப் போராடுகிறேன்’’ என குறிப்பிட்டார்.

இவர், அமெரிக்காவில் ‘சைட்டோசால்வ்’ என்ற நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response