யாரையும் நம்பி சீமான் இல்லை- நாம்தமிழர்கட்சியினரின் பெருமிதம்

நாம்தமிழர்கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களோடு எவ்வித விவாதங்களிலும் ஈடுபடவேண்டாமென அக்கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் மணிசெந்தில் கேட்டுக்கொண்டுள்ளார், அவருடைய பதிவு….

அரசியல் அமைப்புகளில் இருந்து முரண் கொள்ளல்,பிரிதல் என்பவை எல்லாம் அரசியல் வாழ்வில் மிக இயல்பானவை.எத்தனையோ அரசியல் அமைப்புகளில் இருந்து எத்தனையோ பேர் முரண்பட்டு வெளியேறி சென்றுள்ளார்கள். முரண்பட்டு போகிறவர்களும் சில நாட்கள் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட கோபத்தில் கட்சி நாங்கள்தான்,தலைமை சரியில்லை என்பதான வழக்கமான குரல்களை ஒலிப்பார்கள். இதை வெகு நெடுங்காலமாக அன்றாடம் நாம் சந்தித்து வருகிறோம். இது போன்ற சூழல்களை நாம் தமிழர் கட்சியும் தனது வளர்ச்சிப் போக்கில் சந்தித்தது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் இவ்வாறு எழுகிற முரண்களை,பிரிவுகளை அரசியல் வளர்ச்சி போக்கில் நிகழும் இயல்பானவைகளாக கருதுகின்ற பக்குவத்தை அவர் கொண்டிருந்தார். அதை தன்னை சந்தித்து விளக்கம் கேட்ட பாலிமர் தொலைக்காட்சியிடமும் வெளிப்படுத்தினார்.

தனிப்பட்ட என்னளவில் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீது நாம் எவ்வித கோபமும் கொள்ள தேவை இல்லை எனக் கருதுகிறேன். இது ஒரு பயணம். முடியாதவர் வெளியேறுகிறார்கள். முடிந்தவர்கள் தொடர்கிறார்கள். அவ்வளவே. ஒன்றாக இருந்த காலக்கட்டத்தில் அண்ணன் தம்பியாய் பழகிவிட்டு தனித்த பிறகு அவதூறுகளை,வன்மத்தினை வாரி இறைக்கிற பல ”அய்யா”க்கள் போல நாமும் ஆகி விட கூடாது என்பதில் நாம் தமிழர் உறவுகள் கவனம் கொள்ள வேண்டும்.இன்று குறை கூறும் உதடுகள் தான்…நம்மை காட்டிலும் முன் நின்று வானாளவி புகழ்ந்தன

மதிப்புறு வாழ்க்கையை லட்சியப்பாதையில் சமைக்கிற பிள்ளைகள் ..சந்து முனைகளில் நின்று சண்டை போடுவது சங்கடமாக இருக்கிறது.

வெளியே நிற்பவர்கள் எவராயினும்..அவர்களும் ஒரு காலத்தில் நம்முடன் இருந்தவர்கள்..உழைத்தவர்கள் என்கிற மதிப்பினை நாம் இழக்கும் புள்ளியிலேயே நாமும் மதிப்பிழக்க தொடங்குகிறோம் என்பதை உணர வேண்டும்.

எதிரியே ஆனாலும் உரிய மதிப்போடு அணுகுகிற அண்ணனின் தம்பிகள்..மிகச் சாதாரண முரண்களை முகம் கொடுத்து எதிர்க் கொள்கிற ஆற்றல்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நேற்று காரைக்குடி நிருபித்து விட்டது. யாரையும் நம்பி சீமான் இல்லை. தனியொரு மனிதனாகத்தான் அவன் தமிழக வீதிகளில் முழங்க தொடங்கினான். இன்று நிற்கிற நான்
உட்பட .. யார் விலகிப் போனாலும்…அவன் அவன் பாதையை தொடருவான்..உழைப்பான்..முழங்குவான்..இன்னும் இணைப்பான். பிரிந்துப் போன யாரையும் அண்ணன் ஏசுவதில்லை. அவர் அவரது வேலையை செய்துக் கொண்டே செல்கிறார். அடுத்தவர் ஏசலை,தூற்றலை திரும்பி பார்க்க கூட அவருக்கு நேரமில்லை.

விரைந்து செல்லும் அவரது வாகனம் ..ஏதாவது ஒரு கிராமத்தில் கருஞ்சட்டை அணிந்து காத்திருக்கிற தம்பிகள் மீது கருணை கொள்கிறது..அங்கே ஒரு மேடை…மக்களை விழிப்புணர்விற்கு உள்ளாக்கிற பரப்புரை.. மீண்டும் பயணம்..தொடருகிறான் அவன் இலட்சிய உறுதியோடு…

நாம் தமிழர் உறவுகள்..இத்தகைய விவாதங்களில் பங்கேற்பதை முழுமையாக தவிர்த்து ஆக்கப்பூர்வமாக பதிவுகள் இட கோருகிறேன்.

வீசப்படுகிறவை சொற்கள் தானே ஒழிய,
கற்கள் அல்ல-தேசியத்தலைவர்.

சீமானின் தம்பிகளாக இருப்போம்..
சீமானாகவே வாழ்வோம்.

Leave a Response